உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள்! அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சவால்

Parliament of Sri Lanka Easter Attack Sri Lanka Dayasiri Jayasekara Ministry of justice Sri lanka
By Rakshana MA Mar 09, 2025 05:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மொத்த ஊழியர்ப்படையில் 66.6 சதவீதம் ஆண்களின் பங்களிப்பும், 31.3 சதவீதம் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகிறது. இன்றும் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது.

இதன்படி, பெண்களின் முன்னேற்றத்துக்கு அமைய இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காசாவிற்கு உதவி விநியோகங்களைத் தடுக்கும் இஸ்ரேல்

காசாவிற்கு உதவி விநியோகங்களைத் தடுக்கும் இஸ்ரேல்

உள்ளூராட்சிமன்ற தேர்தல்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் வழங்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள்! அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சவால் | Statement About Easter Attack Sri Lanka

இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது.

படலந்தா வதை முகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்த பணியைச் செய்ய முடியும் என்று அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியிருந்தார். 

மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை

ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW