ஜூன் மாதத்தின் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து வெளியான தகவல்

Sri Lanka Tourism Sri Lankan Peoples Tourism
By Rakshana MA Jun 15, 2025 11:00 AM GMT

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து அதிகளவாக 12,362 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மருதமுனையில் விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

மருதமுனையில் விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை

இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 28.1 சதவீதம் ஆகும். இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 3,740 பேரும், பங்களாதேஷிலிருந்து 2,717 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,439 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 2,403 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜூன் மாதத்தின் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து வெளியான தகவல் | Srilanka June 2025 Tourist Data

இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,073, 765 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, 216,422 பேர் இந்தியாவிலிருந்தும், 111,285 பேர் ரஷ்யாவிலிருந்தும், 100,014 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.

ஈரானை சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்..!

ஈரானை சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்..!

கிழக்கில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பு

கிழக்கில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW