தனி நபரினால் நாட்டினை கட்டியெழுப்புவது என்பது மிகக்கடினமான செயல்: பிரதமர் ஹரிணி

Government Of Sri Lanka Parliament Election 2024
By Rakshana MA Oct 19, 2024 01:04 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனி நபரினால் நாட்டினை கட்டியெழுப்புவது என்பது மிகக்கடினமான ஒரு செயலாகும், எனவே மக்கள் பொறுப்பாளர்களாக சிறந்த நாடாளுமன்ற குழுவை தெரிவு செய்ய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று (19) மஹரகமவில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் காரணங்கள் சொல்லி ஏமாற்றிவிட்டார் : ஹரீஸ் ஆதங்கம்

ரவூப் ஹக்கீம் காரணங்கள் சொல்லி ஏமாற்றிவிட்டார் : ஹரீஸ் ஆதங்கம்

மக்களின் தெரிவு

மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் அரசியல் ஆட்சியில் இருந்த யாரும் நினைத்தும் பார்த்திருக்கமாட்டார்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்று, ஆனால் இன்று மக்களின் தேர்வினால் ஆட்சியமைத்துள்ளது.

தனி நபரினால் நாட்டினை கட்டியெழுப்புவது என்பது மிகக்கடினமான செயல்: பிரதமர் ஹரிணி | Srilanka Future In Public Hands Harini Vision

தற்போதுள்ள நாட்டின் நிலைமையை மீட்டி வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வலிமையான நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை இன்றியமையாதது. ஆகவே இது மக்களின் பொறுப்பு.

மக்களின் சிறந்த தெரிவுகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம், நாட்டினை சீர்செய்து மாற்றியமைக்க நாடாளுமன்றத்திற்கு சிறந்த குழுவினை அனுப்பி வையுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW