ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள் : இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!
இஸ்ரேலுக்கு வேலைக்காக அனுப்பப்பட்ட இலங்கையர்களில் 17பேர் அவர்களின் வேலை ஒப்பந்தங்களை மீறியதனால் நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை வீசாவில் இஸ்ரேலுக்குள் நுழைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தூதுவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதில் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டும் வெளியேறி பேக்கரிகளில் பணிபுரிந்தனர்.
ஒப்பந்தங்களை மீறிய இலங்கையர்கள்
இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பிடிபட்டதாக குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு வேலை வீசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைகின்றவர்கள் தமது வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையை தான் செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான வேலை மாற்றங்களை செய்வதை இஸ்ரேல் அரசாங்கம் கடுமையாக தடை செய்துள்ளது.
இஸ்ரேலை பொறுத்த வரையில், வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
வீசா மாற்றம்
அத்துடன், வெளிநாட்டு பணியாளர்கள் அவர்களது அசல் வீசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலை வகைகளுக்கு மாறுவதை கண்டிப்பாக தடை செய்கிறது.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு பராமரிப்பு பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் தனது வேலை நிலைமைகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட்டார், மேலும் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கும் தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது என இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |