இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
Sri Lanka
Sri Lankan Peoples
Israel
By Chandramathi
கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற, இலங்கையர் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
விசாரணை
ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொலையாளி 2 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய பொலிஸார் இன்டர்போல் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.