கிரிக்கெட் போட்டியில் தாக்கம் செலுத்திய குண்டு தாக்குதல்!

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team
By Chandramathi Nov 13, 2025 01:16 PM GMT
Chandramathi

Chandramathi

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கி, போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ளதாக, பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இரண்டு நாட்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரு பகுதியினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக மீண்டும் இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

கிரிக்கெட் போட்டியில் தாக்கம் செலுத்திய குண்டு தாக்குதல்! | Sri Lanka Pakistan Cricket Team

முதலில் 16 வீரர்கள் நாடு திரும்புவதாகக் கூறிய நிலையில், தற்போது 8 பேர் வரை திரும்புவதாகத் தெரிவுக் குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

நாடு திரும்பும் வீரர்களின் பட்டியலைப் பெற்றவுடன், உடனடியாக மாற்று வீரர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், வீரர்கள் தங்கள் விருப்பப்படி விலக அனுமதிக்கப்பட்டாலும், மாற்று வீரர்களைக் கொண்டு போட்டியைத் தொடர்வதே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் நாடு திரும்பும் வீரர்கள் இரண்டு ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட சட்டப்பூர்வ வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடத் தடை

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கி, போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ளதாக, பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் தாக்கம் செலுத்திய குண்டு தாக்குதல்! | Sri Lanka Pakistan Cricket Team

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்த இலங்கை அணிக்கு, பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்திறன் மற்றும் ஒற்றுமையின் உணர்வு பிரகாசிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறும் என்றும் கட்டுப்பாட்டு சபை தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.