ஜப்பானில் இலங்கையர் செய்த மோசமான செயல்

Sri Lankan Peoples Japan Crime World Visa-Free Entry
By Rakshana MA Jul 09, 2025 05:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜப்பானில் (Japan) இருந்து பல இலங்கையர்களை ஏமாற்றிய இலங்கையர் ஒருவர் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, ஜப்பானில் குடியேற்ற அதிகாரிகளிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து சக இலங்கையர்களுக்கு சட்டவிரோதமாக வதிவிடம் பெற உதவிய சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

விசா மோசடி 

மேலும் இதன்போது 44 வயதான மொஹமட் இர்பான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபரின் மூலம் போலி ஆவணங்களை வழங்கி விசா பெற்ற 9 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் இலங்கையர் செய்த மோசமான செயல் | Sri Lankan Arrested In Japan

மோசடியான முறையில் விசாவை பெற்றுக்கொடுக்க பெருந்தொகை பணத்தை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW