இலங்கைக்கு ரஷ்யாவிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாக தகவல்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தரவுள்ள ரஷ்ய மக்கள் மூலம் 102 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிலிருந்து (28) ரஷ்யாவிற்கு உரித்தான ரெட்விங்ஸ் எயர்லைன்ஸ் எனும் விமான சேவையினூடாக 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வாரத்திற்கு 6 விமானங்கள் எனும் அடிப்படையில் மொஸ்கோ உட்பட 6 ரஷ்ய நகரங்களில் இருந்து வருகை தரவுள்ளன, அடுத்த வருடம் மே மாதம் 6ம் திகதி வரையில் இவ் விமானங்கள் ஹம்பாந்தோட்டை மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும்.
சுற்றுலாத்துறையால் பல மில்லியன்கள்
அத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு இதே விமான சேவையினூடாக 94,795 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் இவர்களின் மூலம் 150 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் தான் 9 வருடகாலமாக அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளேன் இப் பழிவாங்கலை முடிவிற்கு கொண்டு வரவேண்டிய நேரம் இது, எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |