மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!
தற்பொது சந்தையில் மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைவடைந்து வருவதனால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரக்கறிகளின் புதிய விலைகள்
இதனடிப்படையில், ஒரு கிலோ போஞ்சி ரூ.350 - 370 ஆகவும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 - 550 ஆகவும், ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) ரூ.400 ஆகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 - 380 ஆகவும், ஒரு கிலோ வெண்டக்காய் ரூ 230 ஆகவும், ஒரு கிலோ புடலங்காய் ரூ.220 ஆகவும், ஒரு கிலோ தக்காளி ரூ.180 - 210 ஆகவும், ஒரு கிலோ வெள்ளரிகாய் ரூ.100 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும் கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கு குறைவாக காணப்பட்டாலும் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |