நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரரிவாகவுள்ள, 10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களின் புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
முதல் நாடாளுமன்ற அமர்வு
இந்த பொது தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசிய பட்டியலில் 29 உறுப்பினர்களும் என நாடாளுமன்றத்திற்கு மொத்தமாக 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேலும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |