சாணக்கியனின் பிரசாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணைக்குழு தடை
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில்(Kaluwanchikudy) இடம்பெறவிருந்த தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா. சாணக்கியனின் பிரசாரக்கூட்டமானது தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
தேர்தல் முறைப்பாட்டு பிரிவு
குறித்த கூட்டம் மாலை 6.00மணியளவில் தொடங்கப்படவிருந்த நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக தேர்தல் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான முகுந்தன் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள்,பொலிஸார் குறித்த கூட்டத்தினை ஆலய வளாகத்தில் செய்யமுடியாது என தடுத்துள்ளனர்.
இதன்போது ஏற்பாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டபோதிலும் பின்னர் குறித்த கூட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |