வடக்கை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்கு அழைத்த ஜனாதிபதி!

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Rakshana MA Nov 11, 2024 12:42 PM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு, யுத்த காலத்தில் நாட்டை விட்டும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) “நாடாளுமன்றத்தினை சுத்தம் செய்வோம்” எனும் தலைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் ,

வடக்கில் அமைதியானதும் சுதந்திரமானதுமான சூழல் ஒன்றை ஏற்படுத்தத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுப்பு

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுப்பு

மக்களின் தெரிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு முழுவதும் உலாவந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தற்போதைய தேர்தல் காலத்தில் இங்கு தலைகாட்டவில்லை.

வடக்கை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்கு அழைத்த ஜனாதிபதி! | President Calls Expats To Rebuild North

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து மாத்திரமே வடக்கிலிருந்து வெளியாகியிருந்தது.

தேர்தலுக்கு பின் வடக்கு இளைஞர், யுவதிகளிடையே பாரிய எழுச்சியும் காணப்பட்டது.

பழைய தலைவர்கள் பேருந்தைத் தவறவிட்டுள்ளனர், பேருந்தைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் பேருந்தில் இடமளிக்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள்

தொடர்ந்தும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பரம்பரை காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதோடு அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ள வடக்கினை முழுமையாக அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் மற்றும் மக்களுக்கான அடிப்படை கொடுப்பனவுகளும் கொடுக்கப்படும்.

வடக்கை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்கு அழைத்த ஜனாதிபதி! | President Calls Expats To Rebuild North

இதற்கெல்லாம் அடித்தளமாக யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களது அறிவினாலும், செல்வங்களாலும் வடக்கினை கட்டியெழுப்பு வேண்டும் என ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது, அதற்கான சிறந்த காலம் உதயமாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

சுன்னாகத்தில் பொலிஸார் மீது இளம்தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery