இலங்கையில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு குறித்து வெளியான செய்தி
Sri Lanka
Technology
By Rakshana MA
மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
மின்னணு தேசிய அடையாள அட்டை அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
மின்னணு தேசிய அடையாள அட்டை
தற்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், அதனால் டிஜிட்டல் அடையாள அமைப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |