உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

CID - Sri Lanka Police Sri Lanka WhatsApp Sri Lankan Peoples Deepfake Video
By Rakshana MA Oct 24, 2024 04:46 PM GMT
Rakshana MA

Rakshana MA

கையடக்கத் தொலைபேசிக்கு வரும் அழைப்புக்களுக்கு பதிலளித்தால் வெடித்துவிடும் என சமூக வலையத்தளங்களில் பரப்பப்படும் போலியான காணொளி பொய்யானது எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த காணொளியில் “கவனமாக கேளுங்கள் செய்தியை நண்பர்களுக்கு பகிருங்கள்  அறிவுறுத்தப்படுகின்றது.

4 அல்லது 13 இல் ஆரம்பமாகும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும்.

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

போலியான கருத்து

இதற்கு முன்னர் இது போல நடைபெற்றுள்ளது. இதனால் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலும் பலர் இறந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம் | Sri Lanka Team Warns Of Fake Deadly Call Videos

இதற்கு விளக்கமளித்த அவர், இது தொடர்பான எந்தவொரு சம்பவங்களும் இதுவரையில் பதிவாகவில்லை மேலும் பரப்படும் செய்திக்கு தொடர்பில்லாத, தலையில்லாத மனிதன் இரத்த வெள்ளத்தில் இருப்பது போல குழப்பமான காணொளி ஒன்றும் பரப்பப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை நடத்த பல கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில் உண்மையை அறிய குறித்த காணொளியானது விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அழைப்பின் மூலம் தொலைபேசிகளை வெடிக்கச் செய்யும் தொழிநுட்பம் இதுவரையில் சாத்தியப்பாடில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இவ்வாறான உறுதிசெய்யப்படாத போலியான கருத்துக்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

இளைஞர்களால் தடுக்கப்பட்ட பாரிய தொடருந்து விபத்து

இளைஞர்களால் தடுக்கப்பட்ட பாரிய தொடருந்து விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW