இளைஞர்களால் தடுக்கப்பட்ட பாரிய தொடருந்து விபத்து
களுத்துறை - வஸ்கடுவ கரையோர பகுதியில் காணப்படும் தொடருந்து தண்டவாளத்தின் ஓரிடத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்பின் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்தை இரு இளைஞர்கள் தடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் தொடருந்துப் பாதையில் 25ஆவது மைல்கல் அருகில் உள்ள தண்டவாளத்தில் ஒரு பக்கத்தில் சுமார் 8 அங்குல வெடிப்பு காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இது தொடர்பில் களுத்துறை வடக்கு மற்றும் வாத்துவ தொடருந்து நிலையங்களுக்கு உடன் அறிவித்துள்ளனர்.
உடனடி நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பில் தொடருந்து நிலைய அதிபர் யு. ஐ. பி. ரொட்ரிகு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி வாத்துவ தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருத்தப்பணி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவ்வழியான தொடருந்து சேவை ஒரு மணிநேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |