இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இலங்கையில் சுற்றுலாத்துறையின் வருமானம் தற்போது 41 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 959.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கை
மேலும், இது ஒப்பீட்டளவில் 2023ம் ஆண்டை விடவும் 41.5 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் வருமானம் 678.5 பில்லயின் ரூபாவாக காணப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டில் இது 281.3 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 105.6 பில்லியன் ரூபா என மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |