இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி: சுங்க திணைக்களம்
இலங்கையில் இவ் வருடம் செப்டம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி வருமானம் 3.49% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி சேவையானது ஒவ்வொரு வருடமும் 6.08% இனால் அதிகரிக்கும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் ஏற்றுமதி 3.49% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் தேயிலை, இறப்பர், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கடலுணவு போன்றவற்றின் தேவைகள் குறைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்றுமதியின் வீழ்ச்சி
மற்றும் ஏனைய தளபாடங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஏற்றுமதியில் 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டியுள்ள நிலையில் அனைத்திலும் 12% ஏற்றுமதிப்பொருளாக காணப்படும் தேயிலையானது 2.44% இனால் குறைவடைந்து 117.03 மில்லியனாகவுள்ளது.
இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 10.26% குறைந்துள்ளமையை காட்டுகின்றது. மேலும் வணிகச் சேவைகள் மற்றும் வணிகப்பொருட்கள், சுவையூட்டிகளின் ஏற்றுமதியின் அளவு குறைந்தமையும் வீழ்ச்சிக்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் இறப்பர் ஏற்றுமதியும் 4.1% இனால் குறைவடைந்து மொத்தமாக 12.19% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |