வரி பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை அரசு
புதிய கட்டணக் கொள்கையுடன் நாட்டின் வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தடுக்கும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை கணிசமாகக் குறைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையில், அமெரிக்கா கடுமையான கட்டணக் கொள்கையை விதிக்கும் சூழலில், இலங்கை உட்பட GAP Plus வரிச் சலுகையைப் பெற தகுதியுள்ள அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் அந்தச் சலுகையை இழக்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்த கட்டணங்கள் குறித்து அரசாங்கம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று இலங்கை சரக்கு மற்றும் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் இனாம் கஃபூர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க ஆகியோர் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் அரசாங்கக் குழு ஒன்று அமெரிக்கா செல்ல உள்ளதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |