பாலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாக செயற்படும் மகிந்த ராஜபக்ச: அலி சப்ரி
இலங்கை அரசியலில் ராஜபக்சக்கள் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கின்றனர். இதனால் இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சக்களை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.
இதற்கு பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர். கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.
பாலஸ்தீன முஸ்லிம்கள்
முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, இளம் வயதிலிருந்தே பாலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.
ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மகிந்த ராஜபக்சவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.