சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று(10) நள்ளிரவு 12 மணி வரை தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 (2025)இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நவம்பர் (05) முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.
அறிவித்தல்
அதன் பின்னர், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு டிசம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,
பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் எக்காரணம் கொண்டும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்க வாய்ப்பில்லை.
எனவே, இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் எவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் நிகழ்நிலையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இணையத்தளம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
அதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்களின் பரீட்சை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கல்வியமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |