நட்டமடையும் நூற்றுக் கணக்கான அரச நிறுவனங்கள்!
                                    
                    Anura Kumara Dissanayaka
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Government Of Sri Lanka
                
                                                
                    President of Sri lanka
                
                                                
                    Presidential Update
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    நட்டமடைந்து கொண்டிருக்கும் நூற்றுப்பதின்மூன்று அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) உத்தரவிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு
அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள்ளாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    