அரசியலுக்காக பகடைக்காய்களாக்கப்படும் தமிழ் - முஸ்லிம் மக்கள்
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Faarika Faizal
அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே துவேசத்தை ஒருசிலர் உண்டு பண்ணியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களுடைய இனத்தை முன்வைத்துக்கொண்டு மற்றைய இனத்தால் தமது இனத்துக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்படும் என்ற தோற்றப்பாட்டை அரசியல்வாதிகள் பெரியதாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு, இலங்கையின் வானொலியொன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எனினும் இந்த நிலைகளை மாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |