கரையோரப் பிரதேசங்களில் ஏற்படப்போகும் மாற்றம்! பொதுமக்களுக்க விடுக்கப்பட்ட அறிவிப்பு
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய (26) நாளுக்கான வானிலை முன்னறிவிப்பிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கிலிருந்து காற்று வீசும், காற்றின் வேகம் மணிக்கு 30 - 40 கி.மீ. வரை இருக்கும். சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோர கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 - 60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
காற்றின் வேகம்
சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக வாகரை வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும்.
சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக வாகரை வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் கடலின் உயரம் சுமார் (2.0 – 3.0) மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |