அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Ampara Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Mar 15, 2025 05:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பழுதடைந்த பழ விற்பனை தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவரால் நேற்று(14) கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட சில பழ விற்பனை நிலையங்கள் யாவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.

இதன்போது, பழுதடைந்த பழங்களை விற்பனை செய்த கடை அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்த போது பல பழுதடைந்த பழங்கள் மீட்கப்பட்டன.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிற்கான ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அதிருப்தி

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிற்கான ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அதிருப்தி

தண்டப்பணம்

மேலும் கடந்த வியாழக்கிழமை(13) அன்று கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத சில கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சேர்த்து நேற்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பித்த வேளை 5 விற்பனை நிலையங்களுக்கு தலா ரூபா 20,000 - இரண்டு கடைகளுக்கு ரூபா 10,000 - இரண்டு கடைகளுக்கு ரூபா 5,000 என மொத்தமாக ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Spoiled Fruits Traders In Ampara

அத்துடன், பொதுமக்கள் தங்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை

இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் அறிவிப்பு

இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery