இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் அறிவிப்பு
அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இன்று (14) முதல் இரவுப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என இலங்கை கிராம அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரக் கடமை
சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஷாமலி வத்சல குலதுங்க இது தொடர்பில் மேலும் கூறுகையில், இரவு நேரக் கடமைகளை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற அல்லது மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்கள் மூடப்படும்.
உத்தியோகபூர்வ பணிகள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இரவுப் பணிகளில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெண்கள் மற்றும் சிறுவர்கள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் உறுதியளித்தார்.