நாம் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் : ஹரீஸ் எம்.பி

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Jul 31, 2024 05:00 AM GMT
Rukshy

Rukshy

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றுதான் நான் சொல்வேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் அபிவிருத்திப்பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு விசாரணைக்கான திகதி நிர்ணயம்

வித்தியா படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு விசாரணைக்கான திகதி நிர்ணயம்

நாட்டின் அபிவிருத்தி

மேலும் தெரிவிக்கையில், ”துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் ஏற்பட்ட கோவிட் மூலம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாட்டின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உள்ள எந்த அமைச்சருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ நாட்டின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

நாம் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் : ஹரீஸ் எம்.பி | Spending Time We Opposition Betrayal People

ஆனால் இப்போது ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில நிதி ஒதுக்கீடுகளை செய்ய முற்பட்டபோது. துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படாமல் இரத்து செய்யப்பட்டிருந்தது.

ஏனென்றால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கின்றோம்.

மக்களினுடைய பிரச்சினை

இருந்தபோதிலும் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உங்களுக்கு தெரியும் ஒரு கற்றறிந்த கல்விமான் அதேபோல இனவாத ரீதியாக சிந்திக்கின்ற ஒரு கடும்போக்கு வாதி அல்ல.

நாம் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் : ஹரீஸ் எம்.பி | Spending Time We Opposition Betrayal People

மக்களினுடைய பிரச்சினையினை கேட்டறிகின்ற ஒரு ஜனாதிபதியாக இருந்தபடியினால் நான் தைரியமாக சென்று நமது மாவட்டத்தின் அவல நிலை பிரச்சினைகளை எடுத்துக் கூறினேன்.

நீண்ட காலமாக நாங்கள் யுத்தத்தில் முகம் கொடுத்தது மட்டுமில்லாமல் அரசின் அபிவிருத்தித் திட்டத்தில் முழுமையாக உள்வாங்கப்படாத மாவட்டம் என்பதை சுட்டி காட்டியதினால் எங்களுக்கு மெது மெதுவாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தார்.

அதனால்தான் நான் அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ஒரு கடமையில் இந்த அபிவிருத்தி திட்டத்தை உங்களுக்காக கொண்டு வந்திருக்கின்றேன்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை: அரியநேத்திரன்

தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை: அரியநேத்திரன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW