நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

Sri Lanka Weather
By Mayuri Jul 31, 2024 01:44 AM GMT

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமாக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும்.

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் | Weather Alert In Sri Lanka

பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW