நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Apr 24, 2025 01:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மொத்தமாக 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் பௌத்த மக்களுக்கு ஓய்வெடுக்க இடமளிக்கும் பள்ளிவாசல்!

கண்டியில் பௌத்த மக்களுக்கு ஓய்வெடுக்க இடமளிக்கும் பள்ளிவாசல்!

விசேட சுற்றிவளைப்பு

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 167 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 82 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள் | Special Roundup Operation In Sri Lanka

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 122 கிராம் 447 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 168 கிராம் 513 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 154 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 300 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல திட்டங்கள்

ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல திட்டங்கள்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW