வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 19, 2024 09:32 AM GMT
Laksi

Laksi

வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள்ளும் தகாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தல், நிழற்படமெடுத்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல், காணொளி பதிவு செய்தல், போன்ற தகாத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

தகாத நடவடிக்கை

அத்தோடு புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், போதைப்பொருள் பாவித்தல், மதுபானம் அருந்தி விட்டு அல்லது போதைப்பொருள் பாவித்து விட்டு வருகை தருதல் போன்ற செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Special Reports For Election Commission

இந்த நிலையில், மேற்குறித்த நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு அனைத்து தரப்புக்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Gallery