தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒன்றுகூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவசர நிலைமை
இதனையடுத்து, இந்த நடைமுறைகளை பின்பற்ற அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |