இலங்கையில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Sep 16, 2024 06:01 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

புனர்வாழ்வு

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு, இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம் | Special Program For Women In Sri Lanka

இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.

இலங்கை வரும் தமது நாட்டவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை வரும் தமது நாட்டவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW