புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Ministry of Education Grade 05 Scholarship examination Education
By Mayuri Sep 16, 2024 02:45 AM GMT
Mayuri

Mayuri

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றைய தினம் (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்றைய தினம் (15) இடம்பெற்றிருந்தது.

நாடளாவிய ரீதியில் 2849 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Grade Five Scholarship Exam

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW