பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

Kandy Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 10, 2024 04:54 AM GMT
Laksi

Laksi

இலங்கை போக்குவரத்து சபையினால் கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சேவையானது எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை உயர்வு! வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை உயர்வு! வெளியான தகவல்

பேருந்து சேவை

அதன்படி, கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை | Special Bus Service By Sri Lanka Transport Board

மேலும், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி எசல பெரஹர இன்றையதினம் முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் புதிய கடவுச்சீட்டுக்கள்

அக்டோபரில் புதிய கடவுச்சீட்டுக்கள்

ஹரின், மனுஷவின் இடங்களுக்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஹரின், மனுஷவின் இடங்களுக்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW