ஹரின், மனுஷவின் இடங்களுக்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.
இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மனுஷ நாணயக்கார 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றிடங்களுக்கான நபர்கள்
அதன்படி, வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துலால் பண்டாரிகொட நாடாளுமன்றம் பிரவேசிக்கவுள்ளார்.
இதேவேளை, ஹரீன் பெர்னாண்டோ தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படுவதால், அந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக சபை தீர்மானம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |