குரங்கம்மை நோய்த் தொற்றை கண்டுபிடிக்க இலங்கை முழுவதும் விசேட திட்டம்

Colombo Sri Lanka Monkeypox
By Laksi Aug 23, 2024 11:25 AM GMT
Laksi

Laksi

இலங்கை முழுவதும் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுதலை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குரங்கம்மை நோயாளிகள் பதிவானால் அவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நோய்த் தொற்றாளியின் காயத்தை தொடுவதன் மூலமோ நீண்ட காலமாக நோய்த் தொற்றாளியின் சுவாசிக்கும் காற்றை சுவாசிக்க நேரிட்டாலோ இந்த நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

நோய் அறிகுறி

எனவே இந்த நோய்த் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் கிடையாது எனவும், தொற்று நோயாளியின் படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகள் ஊடாகவே இந்த நோய்த் தொற்று பரவக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கம்மை நோய்த் தொற்றை கண்டுபிடிக்க இலங்கை முழுவதும் விசேட திட்டம் | Special Action On Monkeypox In Sri Lanka

இதேவேளை, குரங்கம்மை பாதித்த நோயாளிகளிடம் காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை காண முடியும் எனவும் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழுவினருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழுவினருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW