பதவி விலகிய சபாநாயகர்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Government Ashoka sapumal rangwalla
By Laksi Dec 13, 2024 12:36 PM GMT
Laksi

Laksi

சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwalla) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

பதவி விலகல்

எனது கல்வித் தகுதி குறித்து தான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை. ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லை.

பதவி விலகிய சபாநாயகர் | Speaker Asoka Ranwala Resignation

அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW