பொதுத் தேர்தல் குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை
Jaffna
University of Jaffna
General Election 2024
By Laksi
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை யாழ்ப்பாணத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிந்துஜன் விடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகள்
அத்தோடு, எங்களுடைய வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்தின் தரப்பில் நின்று தமிழர்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகளும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என எஸ்.சிந்துஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |