அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

Ampara Sri Lankan Peoples Rice
By Rakshana MA Mar 18, 2025 12:31 PM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை(Ampara) மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா(Aatham Bawa) தெரிவித்துள்ளார்.

கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த (16) சங்கத்தின் தலைவர் ஏ.எல்.பதுறுதீன் தலைமையில் நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

பிரச்சினைகளுக்கு தீர்வு

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கு வகிக்கிறது.

நெல்லை அரிசியாக மாற்றி இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் வழங்கும் அரிசி உற்பத்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு | Solution To Problems Faced By Factory Owner Ampara

நாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சகல வழிகளிலும் பெரும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.

அவர்கள் நாட்டுக்குரிய வர்த்தகர்களாக மாத்திரமில்லாமல் உற்பத்திகளை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும்.

இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று எமது நாடும் மாற்றமடையும். இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW