நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு
நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல், மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
யாழில் நேற்று (02) நடைபெற்ற யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை
இந்தநிலையில், தமிழ் மொழியையும், சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |