தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

Rauf Hakeem Sri Lanka Politician Sri Lankan Peoples
By Rakshana MA Apr 27, 2025 05:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

தொலைபேசி சின்னம் காலாவதியாகிவிட்டது ஆகவே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் அதை ஆதரிக்கக்கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauf hakeem) தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னம் நீண்ட காலமாகிவிட்டது. அதற்காக தாங்கள் வாக்குகளைக் கோர மாட்டோம், என்று ஹக்கீம் தனது உரையின் போது கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்படும் இலங்கை! இம்ரான் எம்.பி

இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்படும் இலங்கை! இம்ரான் எம்.பி

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

ஐக்கிய மக்கள் சக்தியுடனான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறவு குறித்தும் ஹக்கீம் இதன்போது அவர் எதிர்க்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த முறை, உள்ளூராட்சித் தேர்தல்களில் நாங்கள் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம்.

தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் | Slmc Leader Speech About Phone Symbol Issue

கண்டியில் கூட, நாங்கள் 11 சபைகளில் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் 3 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார்கள், அதுவும், அவர்களின் சொந்த விருப்பப்படி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW