ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் சார்பாக அவரது சகோதரர் சன்ன விக்ரமசிங்க, யசஸ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா ஆகியோர், இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, அவர்கள் இன்று (26) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |