ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி குறித்து வெளியான தகவல்

Sri Lanka Government Gazette Election
By Mayuri Jul 26, 2024 01:51 AM GMT

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வேளையில் அரச அச்சக திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி இன்று (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery