ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (04) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
அத்தோடு, இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, முன்னெடுத்துவரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்: இலங்கையும் கடுமையாக பாதிக்கப்படலாமென எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |