இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரணிலுக்கு வாக்களிப்போம்: அசங்க நவரத்ன

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 11, 2024 03:33 PM GMT

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பொருளாதாரம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் சொந்த அரசியல் திட்டத்தை நிறைவேற்றின.இரண்டு வருடங்கள் வாழும் உரிமைக்காகப் போராடினார்கள். மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரணிலுக்கு வாக்களிப்போம்: அசங்க நவரத்ன | Sl President Election Ranil

நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த 5 வருடங்களை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கோருகின்றார். அந்த கோரிக்கையை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்தியதற்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்தியதற்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW