தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்தியதற்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 11, 2024 12:12 PM GMT
Laksi

Laksi

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்திய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டத்தின் அழைப்பாளர் பிரியந்த ஹேரத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரியந்த ஹேரத் தெரிவிக்கையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்த முடியாது. நான் இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

சட்டரீதியாக நடவடிக்கை

எனவே, இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று (11) முறைப்பாடு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்தியதற்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு | Complaint Election Commission Use Child Campaign

இந்தநிலையில், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை ஒரு விளம்பரமாக பயன்படுத்தாமல் அதனை எதிர்கால சந்ததிக்கு உதவும் விதமாக மாற்றுவது ஜனாதிபதி வேட்பாளர்களின் பொறுப்பாகும்.

எனவே, இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அவதானமாக இருப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

இறக்குமதி வரி திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி வரி திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW