தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை

Trincomalee Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 14, 2024 03:28 PM GMT
Laksi

Laksi

விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது இன்னொருவரை அழைத்து செல்ல முடியும் எனவும் இதற்கான விடயதானங்களை கிராம சேவகர் ஊடாக பெறலாம் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிதாக வாக்களிக்க செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான அச்சமற்ற நிலை இல்லாது  வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்பலகாமம், மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் இன்று (14) இளைஞர் யுவதிகளுக்கான 18+ வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் உட்பட அதற்கு மேலதிகமாக முதற் தடவையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான வாக்களிக்கும் முறை தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை வடக்கில் மன்னார், யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களிலும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தி வருகிறோம்.

தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை | Sl President Election Caffe Announcement

இதில் விருப்பு வாக்கு முறைமை தொடர்பிலும் பல விழிப்புணர்வுகளை நடாத்தி வருவதுடன் எதிர் வரும் சனிக் கிழமைக்கு முன்னர் பல நிகழ்வுகளை நடாத்தவுள்ளோம்.

விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதாயின் வாகன வசதி இன்னொருவரை அழைத்துச் செல்வது தற்காலிக அடையாள அட்டை தொடர்பிலான அதனை கிராம சேவகரிடம் பெறுவது தொடர்பிலும் தெளிவூட்டல்களை மேற்கொண்டு வருகிறோம்.

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

வாக்குகள்

தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடான வழிகாட்டலின் கீழ் இது வரைக்கும் குறித்த பகுதியில் ஐந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தியுள்ளோம்.

தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை | Sl President Election Caffe Announcement

கடந்த காலங்களில் அச்ச சூழ் நிலையில் பல அசௌகரியங்களுடன் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு முதற் தடவையாக வாக்களிக்க செல்பவர்கள் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலமைகளை கருத்திற் கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது கொண்டு செல்லக் கூடிய ஆவணங்கள் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டு வருகிறது.

இம் முறை தேர்தலில் ஒருவர் 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறாத பட்சத்தில் இரண்டாம் ,மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் முறைகள் தொடர்பாகவும் பல விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். 

அம்பாறையில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்கேற்பு

அம்பாறையில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்கேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW