அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சவை
நாட்டரிசி இறக்குமதிக்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை கூட்டத்திலே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பகிரங்க விலைமனு கோரலின் பின்னர் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலவும் அரிசித்தட்டுப்பாடு
தொடர்ந்தும் அரச வணிகக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, சந்தையில் நாட்டு அரிசிக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுகின்றமையால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 70,000 மெற்றிக்தொன் நாட்டரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |