இலங்கை மீண்டும் பாதுகாப்பு அச்சத்தில் : அநுரவினை எச்சரித்த நாமல்
இலங்கையில் மீண்டும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (25) ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பலத்த பாதுகாப்பு
மேலும் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க தூதரகத்தினால் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள அறுகம்பே அச்சுறுத்தலுக்கமைய நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டும் இதற்கமைய சர்வதேச புலனாய்வு பிரிவுகள், அமைப்புக்கள் என்பவற்றுடன் முப்படையினரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்.
அத்துடன் நுவரெலியாவிலுள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |