அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ்

Sri Lanka Politician Sri Lankan Peoples Political Development National People's Power - NPP Budget 2025
By Rakshana MA Feb 27, 2025 10:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை ஐக்கிய மக்கள் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அரசியல் எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துள்ள எதிர்க்கட்சியில் உள்ள சிறுபான்மை கட்சிகள் பட்ஜெட்டை எதிர்க்கின்றன.

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சிறுபான்மை கட்சிகளின் நிலை

இந்நிலையில், சூனியமாகிப் போயுள்ள தமது அரசியல் எதிர்காலத்தை மீண்டும் நிலை நிறுத்த இந்த சிறுபான்மை கட்சிகள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

எனினும், மக்கள் இன்று இந்த சிறுபான்மை கட்சிகளை வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதை கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அவதானிக்க முடிந்தது. மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். அத்துடன், மக்கள் பட்ஜெட்டை ஆதரிக்கின்றனர், வரவேற்கின்றனர்.

yahya khan - sjc party

சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

இதேவேளை சிறுபான்மை கட்சி ஒன்றின் தலைவர் சிலரை கூலிக்கமர்த்தி எமது கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகின்றார்.

போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி இதை மேற்கொண்டு வருகிறார். அதனைப் பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW