தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sri Lankan Peoples Elephant Train Crash Train Strike
By Rakshana MA Feb 27, 2025 04:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தொடருந்து சாரதிகளுக்கு அநீதி நேர்ந்தால் சில தொடருந்து பாதைகளில் சேவைகளை தொடர்வதில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக தொடருந்து திணைக்களத்தின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா தொடருந்து , அண்மையில் கல்லோயா பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் தொடருந்தில் மோதி 5 காட்டு யானைகள் உயிரிழந்தன.

இதனையடுத்து குறித்த தொடருந்து சாரதிக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

விடுக்கப்பட்ட எச்சரிக்கை 

இது தொடர்பில் தொடருந்து லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் (தொடருந்து சாரதிகள்) சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த தொடருந்து சாரதிக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் ஒருசில தொடருந்து பாதைகளின் சேவைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை! | Train Association Statements In Sri Lanka

குறிப்பாக காட்டுயானைகள் கூடுதலாக உலவும் மஹவ-கல்ஓயா, கல்ஓயா-திருகோணமலை வரையான தொடருந்து பாதைகளில் தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் யானைகள் மோதலைத் தடுக்க விஞ்ஞான பூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத நிலையில், தொடருந்து சாரதிகளை மட்டும் பழிசொல்வது ஏற்புடையதல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு!

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு!

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு!

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW